தர்மதுரை முதல் நாள் வசூல் ரூ.5 கோடி

  • 20-Aug-2016
  • 1442 Views


தர்மதுரை முதல் நாள் வசூல் ரூ.5 கோடி

அரசியல் களத்தில் எதிர் எதிர் துருவங்களாக இருக்கும் இரண்டு பேரை தன்னுடைய தர்மதுரை படத்தைப் பார்க்க வைத்திருக்கிறார் சீனுராமசாமி. விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கே, ராதிகா முதலானோர் நடிக்க சீனுராமசாமி இயக்கத்தில் தர்மதுரை படம் நேற்று வெளியானது. இப்படத்தை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் பார்த்து பாராட்டியுள்ளனர்.

இவர்களின் பாராட்டு ஒரு பக்கம் இருக்க, தர்மதுரைக்கு மக்களின் பாராட்டும் அமோக இருக்கிறது. முதல்நாளில் மட்டும் உலக அளவில் 5 கோடி வசூல் செய்துள்ளதாம். தமிழகத்தில் மட்டும் 3.2 வசூலித்துள்ளதாம். விஜய்சேதுபதி நடித்த படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் தர்மதுரை தானாம். தர்மதுரை படத்தைத் தயாரித்த ஸ்டுடியோ  நிறுவனமே தமிழகம் முழுக்க சொந்தமாக வெளியிட்டுள்ளது.

Related News