சட்டமன்றத்தில் இந்த ஆண்டு அதிகமான கேள்விகள் கேட்டவர்கள் வரிசையில் முதல் இடத்தில் உள்ளவர் திரு ஜி.கே.மணி MLA, சட்டமன்ற குழு தலைவரும் பா.ம.க கௌரவ தலைவரும் ஆவார்.
- அவர்களின் உதவியாளர் சரவணன்
சட்டமன்றத்தில் நீண்டகால அனுபவம் உள்ளதாலும் தன்னுடைய தொகுதி, மாவட்டம் மற்றும் தமிழ்நாடு முழுவதுமான வளர்ச்சி, அனைத்து தரப்பு பொதுமக்களின் கோரிக்கைகள், பிரச்சனைகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரின் அவ்வப்போதைய தேவைகள், பிரச்சனைகள் நன்கு அறிந்தவர் என்பதாலும், அரசியல் பொது வாழ்வில் நீண்ட கால அனுபவம் உள்ளதாலும், சட்டமன்றத்தின் விதி, மரபு, மாண்புகள் முழுமையாக கடைப்பிடித்து செயல்பட்டு வருபவர்.
முன்னாள் முதலமைச்சர்கள் கலைஞர், புரட்சித்தலைவி ஜெயலலிதா உள்ளிட்ட இன்னாள் முதலமைச்சர் வரையிலும் அமைச்சர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் என எல்லா தரப்பினரும் ஏற்றுக்கொள்ளுகிற வகையிலும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாட்டில் உறுதியுடனும் இருந்து சட்டமன்றத்தில் செயல்பட்டு வருபவர்.
சட்டமன்றத்தின் நடைமுறையிலும், பேச்சிலும் தெளிவாகவும், உறுதியாகவும் இருப்பதோடு அவருக்கென தனித்தன்மையும் சட்டமன்ற சிறப்புகளும் உண்டு என்பதை அனைவரும் அறிந்ததே.
சட்டமன்றத்தின் வாயிலாக பாட்டாளி மக்கள் கட்சி முன்னெடுக்கும் அனைத்திற்கும் குரல் கொடுப்பவர், வாதாடி வருபவர், சட்டமன்றத்தின் வாயிலாக பல்வேறு சாதனைகளை படைத்தவர் என்ற சிறப்பு உண்டு.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு சட்டமன்றத்தில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலும் தனி தன்மையும், பெருமையையும், சிறப்புகளையும் உருவாக்கி வருபவர்.