இதே நாளில் அன்று
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில் கிராமத்தில், பெரும்பண்ணையார் குடும்பத்தில், கோவிந்தசாமி -- செல்லத்தம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் கருப்பையா.காமராஜர் இறந்த பின், தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று கட்சியை காப்பாற்றினார். நான்கு முறை மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார். இரு முறை தமிழக காங்கிரஸ் தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலராக எட்டாண்டுகளும் பணியாற்றினார்.இவருக்கு கிடைக்கவிருந்த பிரதமர் பதவி, அரசியல் சூழ்ச்சியால் தடுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை நிறுவினார். கடந்த, 2001 ஆக., 30ல் காலமானார்.ஜி.கே.மூப்பனார் பிறந்த தினம் இன்று!