பாட்டாளி மக்கள் கட்சியின் 36 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பாமகவினர் கட்சி க?

  • 16-Jul-2024
  • 765 Views


பாட்டாளி மக்கள் கட்சியின் 36 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பாமகவினர் கட்சி கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள் அதன் ஒரு பகுதியாக சென்னை தி.நகர் பர்கிட் சாலையில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில்  ஜூலை 16ஆம் இன்று காலை 10.30 மணி அளவில் பாட்டாளி மக்கள் கட்சியின் வடக்கு மண்டல இணை பொது செயலாளரும், முன்னாள் மத்திய ரயில்வே துறை இணை அமைச்சருமான ஏ.கே.மூர்த்தி அவர்கள் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் ஜி.வி.சுப்பிரமணியம், ஜெ.ஜனார்த்தனம் , வடசென்னை வடக்கு மாவட்ட தலைவர் கணினி செல்வம் சென்னை மாவட்ட வன்னியர் சங்கம் கே.எஸ்.கோபால்  அக்னிப்புரட்சி இதழின் ஆசிரியர் நாராயணசாமி, மற்றும் உள்ளிட்ட  கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்...

Related News